மகனின் காதல் தந்தையின் உயிரை காவு வாங்கிய சம்பவம்.. பெண் தரப்பு கொந்தளிப்பால் சேலத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் புதுப்பாளையம் பகுதியை சார்ந்தவர் தங்கவேல் (வயது 53). தங்கவேல் விவசாயியாக இருந்து வரும் நிலையில், இவருக்கு 25 வயதுடைய பிரகாஷ் என்ற மகன் இருக்கிறார். 

பிரகாஷ் அங்குள்ள கச்சக்காரன் வளவு பகுதியை சார்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த மாதம் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இதனையடுத்து, சத்யாவின் தந்தை செல்வம் காவல் நிலையத்தில் புகாரளித்து, தனது மகளை மீட்டு குடும்பத்துடன் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி சத்யா மீண்டும் வீட்டில் இருந்து வெளியேறவே, ஆத்திரமடைந்த செல்வம் பிரகாஷின் வீட்டிற்கு சென்று தனது மகளை தன்னனுடன் அனுப்ப கூறி பிரச்சனை செய்துள்ளார். 

இதன்போது, பிரகாஷின் தந்தை தங்க வேலுக்கும் - சத்யாவின் தந்தை செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் செல்வம் கத்தியால் தங்கவேலை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடார்பாக தகவலறிந்த கெங்கணாபுரம் காவல் துறையினர், தங்கவேலின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து செல்வதை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Farmer Thangavel Murder by Selvam due to Thangavel son Love Marriage Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal