விபரீதம் புரியாமல், வீரியமான பொருளை மணமக்களுக்கு பரிசளித்த சொந்தங்கள்.! - Seithipunal
Seithipunal


திருமண விழாவில் விபரீதம் புரியாமல் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் முகமது ரகுபதின். கர்நாடக மாநிலத்திலுள்ள சிமோகா பகுதியைச் சார்ந்த நசியா. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த திருமணத்திற்கு மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்த நிலையில், திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. இதன்போது, அங்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் முகமது காசிம் என்பவர், மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளார். 

இதனை தம்பதிகளும் சிரித்த முகத்துடன் பெற்றுக்கொண்ட நிலையில், எரிபொருட்களை காட்சி பொருளாக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், பரிசு வழங்கப்பட்ட பொருளால் விபரீத நிகழ்ந்தால், திருமண வீடு திருமண வீடாக இருக்காது என்றும் அறிவுரை வழங்குகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Couple Marriage Relation Gives Petrol Prize


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal