கள்ளகாதலனுக்கு மகளை திருமணம் செய்ய தயாரான தாய்.. கணவன் கொலை?.. சேலத்தில் பயங்கரம்.! 
                                    
                                    
                                   Salem Affair Couple Murder Police Investigation 29 Jan 2021 
 
                                 
                               
                                
                                      
                                            சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டினம் நீர்முள்ளிக்குட்டை கிராமத்தை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 45). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் இருவருக்கும் 15 வயதுடைய மற்றும் 13 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். 
கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக வேல்முருகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் (வயது 62), காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், சங்கீதாவிற்கு தாண்டனூர் பகுதியை சார்ந்த ஆனந்தகுமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்றும், இதனை தனது மகன் கண்டித்ததால், மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து சங்கீதா கொலை செய்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். 

மேலும், தனது பேத்தியை கள்ளகாதலனுக்கு திருமணம் செய்துவைக்க சங்கீதா முயற்சி செய்து வருவதாகவும் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், வேல்முருகனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில், சங்கீதாவும் - ஆனந்தகுமாரும் தலைமறைவாகியுள்ளனர். வேல்முருகனின் தாயார் புகாரின் பேரில் சிறுமிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், கள்ளகாதலனுக்கு மகளை திருமணம் செய்துவைக்க சங்கீதா முடிவு செய்திருந்தது உறுதியானது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Salem Affair Couple Murder Police Investigation 29 Jan 2021