மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..!!
sa viswanathan birthday 2021
சாவி :
தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான 'சாவி" (சா.விஸ்வநாதன்) 1916ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் பிறந்தார்.
எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. அதனால், கல்கி இதழில் அவ்வப்பொழுது 'விடாக்கண்டர்" என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் 'கல்கி" ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார்.

பிறகு 'சாவி" என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய 'மாறுவேஷத்தில் மந்திரி", 'சூயஸ் கால்வாயின் கதை" உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சாவி 2001ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
sa viswanathan birthday 2021