எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.12,500 நிவாரணம்? - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் வெள்ளத்தின்வ போது சென்னை எண்ணூரில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் எண்ணெய் கழிவுகள் பல கிமீ தூரத்திற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்து அதனை வழங்கி வருகிறது. அதேவேளையில் எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணைய் கலந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவால் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வஉசி நகர், உலகநாதபுரம், சத்தியவாணி முத்துநகர் ஆகிய 9 கிராமங்கள் கடுமையாக பாதிப்படைந்ததால் பொதுமக்களும், மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியதால் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 நிவாரண தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் எண்ணெய் படிந்த படகு ஒன்றுக்கு நிவாரணம் ரூ.10,000 நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs12500 relief fund to oil spill affected family


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->