ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி 'கருக்கா' வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!
Rowdy Karukka Vinoth who threw a petrol bomb at the Governors House sentenced to 10 years in prison
கடந்த, 2023- ஆம் ஆண்டு அக்டோபர் 25-இல், சென்னை கிண்டியில் உள்ள, ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்) மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக, கிண்டி போலீசார், நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி 'கருக்கா' வினோத் (42), என்பவனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இவனின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, என்.ஐ.ஏ. அவர்கள், கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். அத்துடன், இவன் மீது, 680 பக்கத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
குறித்த வழக்கு விசாரணை தற்போது முடிந்த நிலையில், 'கருக்கா' வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 05 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும், தவறினால் மேலும் 06 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Rowdy Karukka Vinoth who threw a petrol bomb at the Governors House sentenced to 10 years in prison