விசாரணைக்குச் சென்ற போலீசார் மீது தாக்குதல் - மன்னார்குடியில் பரபரப்பு.!!
rowdy attack police officer in mannarkudi
மன்னார்குடியில், விசாரணைக்குச் சென்ற தலைமை காவலரை ரவுடி கட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழ வீதியில் இயங்கி வரும் மருந்து கடை ஒன்றில் குன்னோஜி ராஜாம்பாளையம் தெருவைச் சேர்ந்த வடிவேல் என்பவர், நேற்று முன்தினம் இரவு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மருந்து கடை ஊழியர் வினோத் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி, தலைமை காவலர் இளைய ராஜா வடிவேலுவை விசாரிப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, வடிவேல் உருட்டு கட்டையால் போலீசாரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில், காயமடைந்த இளைய ராஜாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், தலைமை காவலரை தாக்கிய வடிவேலுவை கைது செய்தனர். முன்னதாகவே வடிவேல் போலீஸாரின் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
rowdy attack police officer in mannarkudi