வீட்டு கூரை சூரிய மின்சக்தி திட்டம்: தமிழக அரசு கூடுதல் மானியம் அறிவித்த 10 நாட்களில் 16,500 பேர் விண்ணப்பம்!
Rooftop Solar Scheme TN Receives 16500 Applications in 10 Days Following Combined Central-State Subsidy Announcement
மத்திய அரசு தொடங்கிய 'பிஎம் சூர்யா கர்: மூஃப்ட் பிஜிலி யோஜனா' (PM Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி பேனல்கள் அமைப்போருக்கு மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகள் இணைந்து வழங்கும் கூட்டு மானியத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மத்திய - மாநில அரசுகளின் மானியப் விவரங்கள்:
மின்சார உற்பத்தித் திறன் மொத்த மானியம்
1 கிலோவாட் (1 kW) மத்திய, மாநில அரசு மானியம் ₹35,000
2 கிலோவாட் (2 kW) மத்திய, மாநில அரசு மானியம் ₹70,000
3 kW மற்றும் அதற்கு மேல் மத்திய, மாநில அரசு மானியம் ₹1,00,000 (அதிகபட்சம்)
திட்டத்தின் தற்போதைய நிலை & விண்ணப்பிக்கும் முறை:
அமோக வரவேற்பு: கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தமிழக அரசு தனது பங்காக கூடுதல் மானியத் தொகையை அறிவித்தது. அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள்ளாகவே 16,500 பேர் மேற்கூரை சூரிய மின்சக்தி அமைக்க ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: விருப்பமுள்ள பொதுமக்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TNEB) அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்: tnebltd.gov.in/usrp
English Summary
Rooftop Solar Scheme TN Receives 16500 Applications in 10 Days Following Combined Central-State Subsidy Announcement