தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு..!! மர்ம நபர்களை தேடிவரும் போலீசார்..!! - Seithipunal
Seithipunal


தனியா வந்த பெண்ணிடம் வழிபறி செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், தென்கரை கிளாமடம் கிராமத்தில் வசித்து வருபவர் ரேவதி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பியுள்ளார்.

அப்போது அவர் தனியே வருவதை அறிந்த மர்மநபர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர். இதனை அடுத்து சாத்தியனேந்தல் கண்மாய் கரை ரோட்டில் அவரை வழிமறித்துள்ளனர்.

மேலும், அவரை மிரட்டி அவரின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ரேவதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரின் புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robbery near Thirupaththur


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal