கஷ்டத்தில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ்! தொடரும் ஆருத்ரா வழக்கு! அதிரடி காட்டிய நீதிபதி! - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர்.கே. சுரேஷ் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டுள்ளது. 

பா.ஜ.க நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக புகார் எழுத்து. 

இது தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராகும் படி அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். 

இந்நிலையில் ஆர்.கே. சுரேஷுக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே. சுரேஷ் மனு தாக்கல் செய்தார். 

மனு, நீதிபதி விசாரணைக்கு வந்த போது ஆர்.கே .சுரேஷ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆருத்ரா மோசடி விவகாரத்துக்கும் மனுதாரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எனவும் மனுதாரரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார் எனவும் தெரிவித்தார். 

அதற்கு எதிர் தரப்பு வழக்கறிஞர், ஆர்.கே. சுரேஷ் வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பாக ஆர்.கே. சுரேஷ் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RK Suresh Bank Account Freeze approach special court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->