தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி..தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!
Revising the voter list Advisory from the Chief Election Officer
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த ஆண்டு தமிழகம்,புதுவையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பது போன்ற பல்வேறு வேலைகளை அரசியல் கட்சியினர் தீவிரமாக செய்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் திமுக, அதிமுக போன்ற பல வாய்ந்த கட்சிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம் எண் 23/2025-ERS (Vol.II) dt. 24/6/2025 மூலம் பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை நடத்தியுள்ளது மேலும் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நாடு முழுவதும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகுறித்த முன்னேற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் புதுச்சேரிதலைமைத் தேர்தல் அதிகாரி ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்,
அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார் மேலும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அட்டவணையை புதுச்சேரிக்கு வெளியிட்ட பின் மேலும் ஒரு கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நடத்தப்படும்இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் துணைத் தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல் மற்றும் ஆதர்ஷ் கலந்து கொண்டனர்.
English Summary
Revising the voter list Advisory from the Chief Election Officer