திருமதி.அன்னி பெசண்ட் அம்மையார் அவர்கள் நினைவு தினம்!.
Mrs Annie Besants remembrance day
பிறப்பால் இந்தியராக இல்லாத போதும், இந்திய சுதந்திரத்திற்காக போராடியதிருமதி.அன்னி பெசண்ட் அம்மையார்அவர்கள் நினைவு தினம்!.
அன்னி பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.
பெண் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கல்வி வழங்க வேண்டும், பெண்களுக்கு 21 வயது வரை திருமணம் செய்து வைக்கக் கூடாது, விதவை மறுமணத்தை ஆதரிக்க வேண்டும் என பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடிய அன்னி பெசண்ட் 1913 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து “இந்திய மாதர் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.
அன்னி பெசண்ட் 1913 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக “காமன் வீல்” என்ற வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து “நியூ இந்தியா” என்ற பெயரில் நாளேடு ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார். நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, 1914 ஆம் ஆண்டு “இந்திய இளைஞர்கள் சங்கம்” (YMIA) என்ற அமைப்பை துவங்கினார்.
1917 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வானார். மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கிய போது, அவர்களுடன் ஏற்பட்ட சில கொள்கை முரண்பாடுகளால் 1929 ஆம் ஆண்டு முதல் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன் போலவே ஈடுபாடு காட்டி வந்தார்.
அன்னி பெசண்ட் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று சென்னை அடையாறில் உடல் நலக் குறைவால் அவரது 85 ஆவது வயதில் காலமானார்.
English Summary
Mrs Annie Besants remembrance day