தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ..அமைச்சர் அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்!
Students scoring 100 marks in Tamil will receive Rs 10000 Students are excited due to the ministers announcement
பொதுத் தேர்வில் தமிழகத்தில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா நேரு உள் அரங்கில் நடைபெற்றது.இந்தவிழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலில் கலந்துகொண்டு பல்வேறு நல திட்டங்களை தொடங்கிவைத்து 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலைப் பயிற்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்..அப்போது விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: "பள்ளிக்கல்வித் துறை தன்னுடைய இலக்கை தாண்டி உழைத்து வருகிறது.அன்புக் கரங்கள் மூலம் பல சிறப்பான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன
பள்ளிக்கல்வித் துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்கள்.2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பள்ளிக்கல்வித் துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரத்தை இரு கண்களாக கருதி முதல் அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று பெருமிதமாக கூறினார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று புதிய அறிவிதுப்பை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு விடும். எங்களுக்கும் பொதுத் தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அரசியல் பேசவில்லை. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்" அப்போது கூறினார் இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
English Summary
Students scoring 100 marks in Tamil will receive Rs 10000 Students are excited due to the ministers announcement