தமிழக தேர்தல் பற்றி அமித் ஷா மேஜைக்கு போன ரிப்போர்ட்! பாஜக கடைசிக்கட்ட வியூகம்! அமித் ஷா போடும் கணக்கு! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது இறுதிக்கட்ட தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக, பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் (10+) வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை தேசிய தலைமை நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர், மாநில தொகுதிப்பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனையில் முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், “கடைசி கட்டத்தில் எந்தவித அலட்சியமும் இல்லாமல் முழு ஆற்றலுடன் பணியாற்ற வேண்டும். தேவையான அனைத்து உதவிகளையும் தேசிய தலைமையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வியூகத்தின் மையமாக ‘பூத் மேலாண்மை’ வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 60%க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் முழுமையாக தாமரைக்கு திரளும் வகையில் ஒருங்கிணைப்பு பணிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை திசைதிருப்ப முயற்சிகள் நடக்கின்றன” என்ற உளவுத்தகவலையும் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது.

இதற்கிடையில், நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்திலும் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் நிர்வாகிகள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அவர்களுடன் விருந்து மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிர அணுகுமுறைக்குப் பின்னால் உள்ள காரணம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது என்னவென்றால், சில உள்சர்வேக்களில் பாஜக வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகத் தெரியவந்ததாம். இதனால், கடைசி கட்டத்தில் நிர்வாகிகளை முழுமையாக இயக்க இந்த ‘மோட்டிவேஷன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், பாஜக இந்த தேர்தலில் வெறும் பங்கேற்பாளராக அல்லாமல், கணிசமான இடங்களைப் பிடிக்கும் நோக்கில் ‘மைக்ரோ லெவல்’ வியூகத்துடன் களம் இறங்கியுள்ளது. இந்த தீவிர முயற்சிகள் எவ்வளவு பயன் தரும் என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Report on Tamil Nadu elections reaches Amit Shah desk BJP final strategy Amit Shah calculations


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->