வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது படைவீடு ரேணுகாம்பாள் திருக்கோயில் - Seithipunal
Seithipunal


கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மூன்று மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டது படைவீடு ரேணுகாம்பாள் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில்  அமைந்துள்ளது படைவீட்டமன் திருக்கோயில்.  உலகப் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலுக்கு தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.  வருடத்தோறும் ஆடிமாதம் முழுக்க இவ்வமனுக்கு  நடைபெறும் திருவிழா உலகப்புகழ்ப் பெற்றதாகும்.  ஆடிமாதம்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து  அம்மனை தரிசித்துச் செல்கின்றனர். 

  சென்ற ஆண்டு கொரானா நோய்த்தொற்றால் திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டும் நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்ப்பார்த்திருக்கும்  சூழலில் தற்போது மூன்று மாதங்களுக்குப் பின், இன்று கோயில் மக்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கொரானா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி திறக்கப்பட்டுள்ள இக்கோயிலில்  தரிசனத்திற்காக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  பக்தர்களிடமிருந்து  தேங்காய், பழம், பூ போன்ற எவ்வித அர்ச்சனைப் பொருள்களையும்  பெற அனுமதிக்கவில்லை என்றும், இத்திருக்கோயில் காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும் எனவும்  காலை  பூஜை 8 மணிக்கும் உச்சிசந்தி பூஜை 11  மணிக்கும் சாயராட்சை பூஜை 6 மணிக்கும் தொடங்கும் எனவும் திருக்கோயிலின் செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

மூன்று மாதங்களுக்குப்பிறகு  வழிபாட்டிற்காக கோயில் திறக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  திறக்கப்பட்ட இன்று காலையே மக்கள் தரிசனத்திற்காக கோயில்முன் காத்திருக்கின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Re - opened for worship at the padavedu Renugambal Temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->