50 காசுகள் செல்லுமா...? ரிசர்வ் வங்கி கொடுத்த முக்கிய விளக்கம்!
RBI says 50 paisa coin legal
நாடு முழுவதும் ₹10 நாணயங்களை ஏற்கப் பலரும் மறுத்து வரும் சூழலில், பயன்பாட்டிலிருந்து மறைந்த 50 காசு நாணயங்கள் இன்னமும் சட்டப்படி செல்லுபடியாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விளக்கம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தெளிவுரை
செல்லுபடியாகும் நாணயங்கள்: புழக்கமே வெகுவாகக் குறைந்திருந்தாலும், 50 காசு நாணயத்தை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திலிருந்து நீக்கவில்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: வெவ்வேறு வடிவமைப்புகளில் உள்ள நாணயங்கள் குறித்த குழப்பங்கள் நிலவுவதைச் சுட்டிக்காட்டிய ஆர்.பி.ஐ., 50 காசு, ₹1, ₹2, ₹5, ₹10, மற்றும் ₹20 மதிப்புள்ள நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாகச் செல்லக்கூடியவை என்றும் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருப்பவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
விழிப்புணர்வு: நாணயங்கள் குறித்த தவறான தகவல்களையோ அல்லது வதந்திகளையோ நம்ப வேண்டாம் என்றும், தயக்கமின்றி நாணயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் ஆர்.பி.ஐ. மக்களுக்குக் குறுந்தகவல்களையும், விடியோக்களையும் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
English Summary
RBI says 50 paisa coin legal