ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்.. கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பணியாளர்கள் அகவிலைப்படி உயர்வு, நியாயவிலை கடைகளுக்கு தனித்துறை ,பொட்டலம் முறை என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அத்தியவசிய உணவுப் பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். வரும் 13ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரேஷன் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில். போராட்டத்தின் போது பொதுமக்கள் பாதிக்காதவாறு இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்தில் அனுப்பி வைக்கவேண்டும். 

பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு No work no pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration shop workers strike cooperative new order


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->