வீட்டினை வாடகைக்கு விட்டது குத்தமா?.. டி.எஸ்.பிக்கே இந்த நிலை... உரிமையாளராக இருந்து வீட்டினை காலி செய்த சோகம்.! - Seithipunal
Seithipunal


வீட்டில் வாடகைக்கு இருந்தவர் கொடுத்த தொல்லையால், வீட்டின் உரிமையாளர் வீட்டினை காலி செய்து வெளியேறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் சுந்தரமாணிக்கம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் இராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இராமநாதபுரத்தில் உள்ள பட்டணம்காத்தான் பகுதியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில், சுந்தரமாணிக்கம் பணிநிமித்தம் காரணமாக வெளியூரில் வசித்து வந்துள்ளார். மகேஸ்வரி தனது குடும்பத்தினருடன் பட்டணம்காத்தானில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக இவர்கள் வீட்டில் உள்ள மாடியில் இருக்கும் வீட்டினை விஜயகுமார் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். 

இந்நிலையில், தற்போது மகேஸ்வரியின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், வீட்டினை காலி செய்யக்கூறி விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த விஜயகுமார், அவரது மனைவி ஷர்மிளா ஆகியோர் தனது மகளுடன் சேர்ந்து மகேஸ்வரியிடம் சண்டையிட்டு வந்துள்ளனர். 

இதனையடுத்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், விஜயகுமார் 3 மாதத்தில் வீட்டினை காலி செய்து தருவதாக கூறியதை அடுத்து வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், விஜயகுமார் கூறியபடி வீட்டினை காலி செய்யாமல் இருந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் வாடகைப்பணமும் வாங்காமல் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுள்ளனர்.

இவ்வுளவு உதவிகள் செய்து உபத்திரம் செய்ய நினைத்த விஜயகுமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து தகராறு செய்து வரும் நிலையில், வேறு வழியில்லாமல் கணவருடன் மகேஸ்வரி மானாமதுரையில் இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Manamadurai DSP House Rental Person Making Problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal