முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்க்கையே அரசியல் தான்  - ரஜினிகாந்த் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்க்கையும், அரசியலும் ஒன்றுதான் என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் மு‌க ஸ்டாலின் அவர்களின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த புகைப்பட கண்காட்சிக்கு 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்னும் தலைப்பில் ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட தொகுப்பு இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் இன்று இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் ஒன்றுதான். அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் முதலமைச்சர் பதவி. அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth speech about TN CM MK Stalin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->