மக்களின் சேவைப்பணி தந்தைக்குரிய பதவி.. நிரந்தரமும் - தற்காலிகமும் நமது கைகளில் உள்ளது.. ரஜினிகாந்த் பேச்சு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் துக்ளக் இதழுடைய 50 ஆவது வருட விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். பின்னர் துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவிற்கான மலரை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் மலரை முதல் பிரதியாக நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஆகியோர் பங்கேற்றுக்கொண்டனர்.  

இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய சமயத்தில், மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பது தந்தைக்குரிய பதவியாகும். இந்த மாபெரும் சேவையினை தொடர்ந்து செய்து வரும் துக்ளக் இதழை சிறப்பாக செயல்படுத்தி குருமூர்த்தி வருகிறார். 

சோ மிகச்சிறந்த அறிவாளி ஆவார். அறிவாளியை தேர்ந்தெடுக்கவே பத்திரிகை துறை இருந்து வருகிறது. சோ எடுத்த ஆயுதமே துக்ளக். சோவின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகை நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 

துக்ளக் இதழையும், சோ ராமசாமியையும் பெரிய அளவில் பிரபலமாக்கிய நபர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பகத்வத்சலம். முரசொலியை பொறுத்த வரையில் முரசொலி என்று கூறினாலே திமுக காரன் என்பார்கள். 

துக்ளக்கை வைத்திருந்தால் அறிவாளி என்று கூறுவார்கள்.. இப்போதுள்ள காலத்தில் அரசியல், சமுதாயம் அதிகளவில் கெட்டுப்போயுள்ளது. சோ மாதிரியான பத்திரிகையாளர் தற்போது மிகவும் அவசியம். 

பால் போன்று இருக்கும் உண்மை செய்தியில் தண்ணீரை கலந்துவிட கூடாது. கலவைகளை நிரந்தரம் - தற்காலிகமானது என்று கையாளும் திறன் நம்மிடம் உள்ளது என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth speech about current situation


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..




கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..




Seithipunal