அவருக்கு ஒன்னும் இல்லிங்க.. பீதியை கிளப்ப வேண்டாம் - ரஜினிகாந்தின் செய்தி தொடர்பாளர் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது பொய்யானது என தெரியவந்துள்ளது. முதலில் வெளியான தகவலில் ரஜினிகாந்துக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சலை தொடர்ந்து, பண்ணை வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக மிகுந்த கவனத்துடன் மக்கள் அனைவரும் இருந்து வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே வீட்டில் மிகுந்த கவனத்துடன் ரஜினிகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். 

இதனால் வெளி ஆட்களையும் வீட்டிற்குள் அனுமதி செய்யாத நிலையில், வெடிகுண்டு தொடர்பான மிரட்டல் வந்த போது கூட மிகுந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே அதிகாரிகளை வீட்டிற்குள் சோதனை செய்ய அனுமதி செய்தனர். 

இந்நிலையில், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்த தகவலை மறுத்துள்ள ரஜினிகாந்தின் செய்தி தொடர்பாளர் ரியாஸ், நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது. இந்த தகவலை யாரும் பகிர வேண்டாம் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Health Condition is good


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal