விவேக்குடன்., சிவாஜி பட அனுபவங்களை நினைவுகூர்ந்து கண்ணீர் விடும் ரஜினி.!  - Seithipunal
Seithipunal


தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகர் விவேக். இவருடைய கருத்துக்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக தனது நடிப்பால் உயர்த்தியதால் அவர் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 

நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 04.35 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கின்றார். இவருடைய மறைவுக்கு அவரது ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தற்போது அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இத்தகைய சூழலில், பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்'  என்று தெரிவித்து இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajini sad about vivek death


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->