ஜெயிலர் படம் ரிலீஸ் - மதுரையில் அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு நடத்திய ரஜினி ரசிகர்கள் - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவழைப்பை பெற்றதுடன் வலைதளங்களிலும் வைரல் ஆகி வந்தது. அதேபோல் இந்த படத்தின் செயலரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதுடன் டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஜெய்லர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி ரஜினி ரசிகர் ஒருவர் மதுரையில் வழிபாடு நடத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்து தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து மண் சோறு உண்டு வழிபாடை நிறைவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini fans swami dharisanam in madurai thiruparangundram for jailre movie release


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->