சென்னை: வாகன சோதனையில் சிக்கிய 2 கிலோ தங்க நகைகள்.! ராஜஸ்தான் வாலிபரிடம் விசாரணை - Seithipunal
Seithipunal


சென்னையில் வாகன சோதனையில் 2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் வாலிபரை கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஆட்டோவை மரித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோவில் வந்த வாலிபரிடம் விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து ஆட்டோவில் சோதனை செய்ததில் சுமார் 2 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் நகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபரை கைது செய்த போலீசார் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜூராம்(24) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தங்க நகைகளை வாங்கி, சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் கொடுக்க வந்ததாக கூறியுள்ளார். ஆனால் நகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்த 2 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரி துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan youth arrested for 2 kg gold jewellery seized in Chennai


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->