விடிய விடிய வெளுத்து வாங்கும் மழை - கோவில்பட்டியில் பொதுமக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு சாலையில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rain water round in house peoples wory in kovilpatti


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->