பணமோசடி வழக்கு - வின் டிவி உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் சோதனை.!
raide in win tv owner places in chennai for money fraud case
சென்னையை அடுத்த மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர வைப்பு நிதி வைத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
டெபாசிஸ்ட் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை பார்த்து ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், சுமார் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 140-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர்.
மோசடி வழக்கில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் போலீசார் தேவநாதனை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி தேவநாதனை வருகிற 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த மோசடி விவகாரத்தில் தேவநாதனுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவி போலீசார் சோதனை செய்தனர். அதில், ரூ. 4 லட்சம் பணம், இரண்டு கார்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
English Summary
raide in win tv owner places in chennai for money fraud case