#Breaking: காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.. தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, " அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழக மக்கள் ஏன் ஜல்லிக்கட்டை விரும்புகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். ஜல்லிக்கட்டில் காளைகள் பலத்துடன் இருப்பதை நான் நேரடியாக பார்த்து தெரிந்துகொண்டேன். 

பலர் என்னிடம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறினார்கள். ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த பின்னர், அது தவறு என்பதை உணர்ந்துகொண்டேன். மத்திய ஆட்சியாளர்கள் தமிழ் மொழியை சிதைக்க முயற்சி செய்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தையும் சிதைக்க முயற்சி செய்கிறார்கள். 

தமிழர்களை அடக்க நினைப்பது, நான் நாட்டிற்கு செய்யும் தவறான விஷயமாகும். ஒரே மொழி மற்றும் ஒரே நாடு கொள்கை தவறானது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் காயம் அடைவது இல்லை. அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்களிடம் இருந்து பலவற்றை நான் கற்றுக்கொண்டுள்ளேன். 

மத்திய அரசு விவசாயிகளையும் அழிக்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான வளங்களை மத்திய அரசு தாரைவார்க்கப்பார்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கிறார்கள் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ragul Gandhi Pressmeet Madurai Airport 14 Jan 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->