இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாக இருந்த வீரர் பிறந்த தினம் இன்று.!!
puli thevar birthday 2021
புலித்தேவர் :
இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'காத்தப்ப பூலித்தேவர்" என்பதாகும். 'பூலித்தேவர்" என்னும் பெயர் 'புலித்தேவர்" என்று அழைக்கப்பட்டது.

இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு" என்று முதல்முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது.
உலக கடித தினம் :
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.

உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.
English Summary
puli thevar birthday 2021