பின்னால் வந்த கொடூரன்., 13 வயது சிறுமி செய்த செயல்.! பெற்றோர்களே கவனம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமி ஒருவரிடம் ஆபாசமாக பேசி, அபசமக நடந்துகொண்ட வாலிபர் ஒருவரை அதிரடியாக போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

சிவக்கண்ணன் என்ற இளைஞர் ஒருவர், 13 வயது சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் ஆபாசமாக பேசி, அந்த சிறுமியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் அச்சம் கொண்ட அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் சிவகண்ணன் குறித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து சிவ கண்ணனை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு, உங்களுக்கு யாரேனும் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக மனம் திறந்து சொல்லும் அளவிற்கு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். 

இந்த 13 வயது சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவித்த காரணத்தினால் மட்டுமே, போலீசார் அவரை கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண் பிள்ளைகள் தங்களின் பாதுகாப்பில் இந்த சிறுமி போல் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களிடம் தங்களுக்கு நடக்கும் துன்பங்கள், ஆபத்துகள் குறித்து முன்னதாகவே சொல்லும் பட்சத்தில் அவர்களை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மனம் திறந்து சொல்லும் அளவுக்கு நீங்கள் பிள்ளைகளிடம் நடந்து கொள்ள வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puduthukottai siva kannan arrested


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->