#Breaking: ஆன்லைன் ரம்மியால் ரூ.2 இலட்சம் இழந்த இளைஞர் தற்கொலை.. புதுக்கோட்டை அருகே சோகம்.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையான ஆலங்குடி பகுதியை சார்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்ததை அடுத்து, அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டத்தினை இயற்றி அமல்படுத்தினார். ஆன்லைன் ரம்மியால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்து அதனை தடை விதிக்க பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட மரணங்களுக்கு பின்னர், பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட கேமிங் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவே, வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தடை சட்டத்தை இரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், மறுசட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதையும் தெரிவித்து, பழைய சட்டத்தில் உள்ள குறைகளை கலைந்து புதிய சட்டத்தை இயற்ற அதிகாரம் அளித்து உத்தரவிட்டது. 

இதனால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் அறிமுகமான நிலையில், கர்நாடக மாநிலத்தில் ரம்மி உட்பட பல்வேறு சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அம்மாநில நீதிமன்றத்தில் கேமிங் நிறுவனம் சார்பாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பி. மாத்தூர் கிராமத்தை சார்ந்த இளைஞர் அருண் குமார். இவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விளையாட்டில் அவர் ரூ.2 இலட்சம் வரை முதலீடு செய்த நிலையில், பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துள்ளார். இதனால் மன விரக்தியில் காணப்பட்ட அருண் குமார், தூக்கிட்டு தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தகவல் அறிந்த ஆலங்குடி காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இன்னும் சில உயிர்கள் பறிபோகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
 
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Alangudi Youngster Arun Kumar Suicide due to Loss Rs 2 Lakh Amount on Online Rummy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->