தனி மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வழங்கக் கூடாது..மத்திய அரசுக்கு 10 ரூபாய் சட்ட இயக்கம்கோரிக்கை!
Puducherry should not be given separate statehoo Demand for Rs 10 law to Centre
கோவாவுக்கு தனி மாநில அந்தஸ்து கொடுத்து சமாளிக்க முடியாமல் மீண்டும் மத்திய அரசிடமே ஒப்படைத்து விட்டது. ஆகையால் எக்காரணத்தைக் கொண்டும் தனி மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வழங்கக் கூடாது என்று புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் நிறுவனர் ரகு என்கின்ற ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து கொடுத்தால் புதுச்சேரியில் கூடிய விரைவில் பஞ்சம் வரும். மத்திய அரசு கொடுக்கும் நிதியில் தான் புதுச்சேரி அரசு ஆளுகிறது. புதுச்சேரியில் வருவாய் 7000 கோடி பட்ஜெட் 20 ஆயிரம் கோடி வரை போடப்படுகிறது யார் கொடுத்த பணம். மத்திய அரசு கொடுக்கும் பணம் பற்றாமல் புதுச்சேரி அரசு 2400 கோடிக்கு மேல் தற்போது பட்ஜெட்டில் கடன் வாங்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் கடன் 24 ஆயிரம் கோடி ரூபாய் யார் அடைப்பது.மத்திய அரசு மேற்பார்வையில் இருக்கும்போது புதுச்சேரியில் பல ஊழல்கள் சர்வாதிகார ஆட்சி தனி மாநில அந்தஸ்து கொடுத்தால் புதுச்சேரி மக்கள் வாழ முடியாது வீட்டுக்கு வீடு மதுபான கடை வந்து விடும் அந்த அளவிற்கு புதுச்சேரி மோசமான நிலைமைக்கு சென்று விடும் சாதாரண ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை சர்வதிகாரம் செய்து கொண்டு நாசம் செய்கிறார்கள். தனி மாநில அந்தஸ்து பெற்றால் புதுச்சேரி சுடுகாடு ஆகிவிடும் அனைத்து மக்களும் தமிழ்நாடு நோக்கி செல்ல வேண்டும் சுற்றி சுற்றி புதுச்சேரியில் மதுபான ஆலை தலைவிரித்து ஆடும் மக்கள் வாழ முடியாமல் நடுத்தெருவில் நிற்கும் எக்காரணத்தைக் கொண்டும் தனி மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வழங்கக் கூடாது என்று புதுச்சேரி 10 ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம்.
ஏனென்றால் கோவாவுக்கு தனி மாநில அந்தஸ்து கொடுத்து சமாளிக்க முடியாமல் மீண்டும் மத்திய அரசிடமே ஒப்படைத்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நமது அண்டை மாநிலம் இலங்கையில் பஞ்சம் தலை விரித்து ஆடி ஒரு புரட்சியை உருவானது அது போல் புதுச்சேரியில் நடக்கக்கூடாது கொடுத்தால் புதுச்சேரி முழுவதும் மதுபான ஆடைகள் தலை விரித்து ஆடும் மக்கள் வாழ முடியாமல் நடுத்தெருவில் நிற்பார்கள். இப்படிக்கு அன்புடன் ரகு என்கின்ற ரகுநாதன் நிறுவனர்.
English Summary
Puducherry should not be given separate statehoo Demand for Rs 10 law to Centre