மயிலாடுதுறை : சாராய விற்பனையை தடுக்கக்கோரி.. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே அருவாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட கடுவங்குடி கிராமம் கணபதி ஆற்றங்கரை ஓரமாக சிலர் சாராயம் விற்று வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் காவல் துறை இருக்கும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாராய விற்பனையை தடுக்ககோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Public road blockade to demand sale of liquor


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->