தமிழக பட்ஜெட் - கருத்து கேட்புக் கூட்டம் ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடப்பு 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மீது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புகள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

மத்திய பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில அளவிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இது இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி மற்றும் முழு பட்ஜெட் என்பதால் அரசு மிக முக்கிய பட்ஜெட்டாக கருதுகிறது. சட்டசபை கூடிய முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், பட்ஜெட்டில் மக்களின் விருப்பங்களை இடம் பெறச் செய்யும் வகையில் பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு முன்பதாக அரசுத் துறைகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள், சங்கங்களுடன் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்திருந்தது.

அதன் படி இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் தொடங்குகிறது. இன்று ஊரக வளர்ச்சி துறை, மக்கள் நல்வாழ்வுதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளுடனும், 20-ந் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதன் மூலம் துறை சார்ந்த தேவைகளும், எதிர்பார்ப்புகளும் என்னென்ன என்பது விரிவாக தெரியவரும் என்றும், இதன் அடிப்படையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

public hearing start from today for tamilnadu budget


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->