மக்கள் குறை கேட்பு கூட்டம்..இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு!
Public grievance hearing meeting Public submits a petition requesting free house site pattas
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் குடும்ப அட்டை வேண்டியும், இலவச வீட்டு மனை பட்டா வேண்டியும், கோயில் நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாகவும், மேலும் அடிப்படை வசதிகள் கேட்டும் பொதுமக்கள் பெரும்பாலானோர் மனு அளித்தார்கள்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த மாதத்துக்கான பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமின் தொடர் நிகழ்வாக இம்மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் இன்று ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் சென்ற மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மாதம் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலும் சிகப்பு நிற குடும்ப அட்டை வேண்டியும், இலவச வீட்டு மனை பட்டா வேண்டியும், கோயில் நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாகவும், மேலும் அடிப்படை வசதிகள் கேட்டும் மனு அளித்தார்கள்.
இம்மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர் அவர்கள் குறித்த தினங்களுக்குள் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு தெரிவிக்கும் படியும் மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.
English Summary
Public grievance hearing meeting Public submits a petition requesting free house site pattas