அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் - ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்.!! - Seithipunal
Seithipunal


தருமபுரி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவர் கோவை ராமநாதபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி, வேலைக்குச் சென்று வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குடும்பத்துடன் சேலத்தில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்தில் முன்பக்க கதவு அருகேயுள்ள மூன்று இருக்கை கொண்ட சீட்டில் அமர்ந்து பயணித்தனர். 

இந்த பேருந்து சங்க கிரியை அடுத்த வளையக்காரனூர் மேம்பாலத்தில் சென்ற போது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். இதில், ராஜ துரையின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இந்த சம்பவம்  தந்தையின் கவனக்குறைவாலும், பேருந்தின் முன்பக்க கதவை மூடாத நிலையில் பேருந்தை இயக்கியதாலும் ஏற்பட்டுள்ளது என்பதால், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

govt bus driver and conductor suspend for baby died fell down issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->