திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து 25-ம் தேதி போராட்டம்..அதிமுக அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஜூலை 25-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

அறிக்கையில் அவர் கூறியதாவது:திமுக அரசு மக்கள் நலனில் தோல்வி: 50 மாத ஆட்சியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசு, தனது குடும்ப நலனையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

திருநின்றவூர் பிரச்சினைகள்: குப்பை அகற்றம் சரியாக இல்லாதது, கொசு மருந்து தெளிப்பு இல்லாமை, சாலைகள் சீரமைப்பு புறக்கணிப்பு, தெரு விளக்குகள் இயங்காத நிலை, குடிநீர் விநியோக குறைபாடு ஆகியவை மக்களை அவதி படுத்துகின்றன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

நகராட்சி அலட்சியம்: நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருநின்றவூர் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து

ஆகவே திருநின்றவூர் நகராட்சியில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து, அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி மாலை 4 மணிக்கு திருநின்றவூர் காந்தி சிலை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எஸ். வைகைச்செல்வன் தலைமையிலும், ளு. அப்துல் ரஹீம், பா. சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும். பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest against Thirunindravur Municipality on the 25th AIADMK announcement


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->