"சாதி" குறித்து இழிவாக பேசிய வரலாற்றுப் பேராசிரியர்.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..!! - Seithipunal
Seithipunal


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாகவும் சாதி ரீதியாக இழிவுபடுத்தியும் பேசியதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அமைந்துள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக சண்முகராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் எம்.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி பாரதி என்பவரை சாதி ரீதியாகவும் ஒருமையிலும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பாரதி மதுரை நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் பேராசிரியர் சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சாதி ரீதியாக பேசியதாக புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரியின் அடிப்படையில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட விசாரணையில் மாணவியை சாதி ரீதியில் இழிவு படுத்தும் வகையில் பேசியது உண்மை என தெரியவந்தது.

இதனை அடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரலாற்று துறை பேராசிரியர் சண்முகராஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேராசிரியர் சண்முகராஜா இரு மாதங்களுக்கு முன்பு மாணவிகளிடம் தவறாக பேசியதை தொடர்ந்து பெற்றோர்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சண்முகராஜா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. 

வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முகராஜா மீது அடுக்கடுக்கான புகார் எழுந்தது அடுத்து இன்று சாதி ரீதியில் மாணவி பாரதியை திட்டியதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Professor arrested for insulting student on caste basis


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->