தனியாருக்கு வழங்கப்பட்ட காலை உணவுத் திட்டம்! வலுக்கும் எதிர்ப்பு!
Privately Served Breakfast Plan
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று, மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பரவலாக வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்க சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காலை உணவு திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Privately Served Breakfast Plan