கிறிஸ்துமஸ் கொண்டாட செல்பவர்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கிறிஸ்துமஸ் கொண்டாட செல்பவர்கள் கொடை எடுத்துச் செல்ல வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் தனது முகநூலில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட செல்பவர்கள் குடை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அடுத்து 3,4 நாட்களில் மழை பெய்தாலும் தூத்துக்குடி மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் சனிக்கிழமை வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private meteorologist warns going celebrate Christmas


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->