ஓசூர் கெலமங்கலத்தில் தனியார் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து..!! பெண் ஒருவர் பலி.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!
Private bus overturned in a field in Hosur 1 woman killed 20 injured
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த ஓசூர் அருகே கெலமங்கலம் எனும் இடத்தில் நாகமங்கலத்தில் இருந்து 40 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி தனியார் பேருந்து சென்றுள்ளது. அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து வளைவு பகுதியில் திரும்பிய பொழுது எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதாமல் இருக்க தவிர்த்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து அருகில் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் பின்புற உள்ள இரண்டு சக்கரங்கள் தனியாக கழன்று விழுந்துள்ளது. இந்த விபத்தில் செக்கேரி பகுதியை சேர்ந்த யசோதா என்ற 40 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மற்ற பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கெலமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Private bus overturned in a field in Hosur 1 woman killed 20 injured