''ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்'' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு.!
Prime Minister Modi post
பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு 7 நாள் சுற்றுப்பயணமாக வந்த பிரதமர் மோடி நேற்று பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று உரையாடினார்.
இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பை பெற்றேன்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி தமிழில் குறிப்பிட்டுள்ளார்.