தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி - கட்சியை வலுப்படுத்த திட்டமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகம் வருகிறார். அந்த வகையில், இன்று கோயம்புத்தூருக்கு வருகிறார். மேலும், வாகன பேரணியில் பங்கேற்கும் அவர், பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.

கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே பாஜகவின் சரஸ்வதி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எம்.எல்.ஏ-க்களாக உள்ள நிலையில் அங்கு தங்கள் கட்சியை மேலும் வலுப்படுத்தவே பாஜக களப்பணியாற்றி வருகிறது. இதற்கு முன்பாக பிரதமர் மோடி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ’என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டு அதிமுகவுக்கு மாற்றுக் கட்சியாக கொங்கு மண்டலத்தில் உருவெடுக்க நினைக்கும் பாஜக, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிற்குப் பிறகு பிரதமரை முன்னிறுத்தி கொங்கு மக்களின் வாக்குகளை பெற நினைக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi come in coimbatore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->