சுதந்திர தினவிழா முன்னேற்பாடு..மாவட்ட ஆட்சித்தலைர் ரஞ்ஜீத் சிங் ஆலோசனை!
Preparation for Independence Day celebration District Collector Ranjith Singh's consultation
தேனி மாவட்டம்,சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு
பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தேனி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா (15.08.2025) நிகழ்ச்சிகள் மாவட்ட
விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தியாகிகள் மற்றும்
அவர்களின் வாரிசுதாரர்கள், பயனாளிகள், செய்தியாளர்கள் ஆகியோர் அமர்வதற்குதேவையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடுசெய்ய வேண்டும்.
காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, ஊர்க்காவல் படை சார்பில்அணி வகுப்பு மரியாதை செய்தல், கொடிக்கம்பம் தயார் செய்யும் பணிகள், விழாமேடைதயார் செய்தல், தீத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட துறைஅலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு
வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த விவரபட்டியல் மற்றும் பள்ளி மாணவ,
மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் குறித்த பட்டியல்களை உரிய காலத்திற்குள் தயாரித்துமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் வழங்க வேண்டும்.குறிப்பாக, விழா நடைபெறும் இடத்தில் போதுமான அளவில் குடிநீர் வசதி, தற்காலிககழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி, போதிய பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படைவசதிகளை ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். சுதந்திர தின விழாவை சிறப்புடன்நடத்துவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அபிதா
ஹனீப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) திரு.முத்துமாதவன்,
திரு.கதிர்வேல் (நிலம்), உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெரால்டு அலெக்சாண்டர்,உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Preparation for Independence Day celebration District Collector Ranjith Singh's consultation