நடுவானில் அலறிய பெண்கள்! கத்தி கதறிய பயணிகள்! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா! நடந்தது என்ன?
Women screamed in mid air Air India apologized to screaming passenger What happened
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI180) ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் தற்போது தலைப்புகளில் இடம்பிடித்துள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு பெண் பயணிகள் தங்களது இருக்கைகளில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை பார்த்து பதட்டமடைந்தனர். அவர்கள் அதிர்ச்சியடைந்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த விமான ஊழியர்கள்
பயணிகள் புகார் தெரிவித்ததும், ஏர் இந்தியா கேபின் ஊழியர்கள் உடனடியாக பதிலளித்து, அந்த இரண்டு பெண்களையும் விமானத்தின் அதே பகுதியிலுள்ள மற்ற இடங்களுக்கு மாற்றினர். இந்த சம்பவம் விமானம் கொல்கத்தா ஏர்போர்ட்டில் எரிபொருள் நிரப்புவதற்காக தங்கியபோது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.
ஏர் இந்தியாவின் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,"AI180 விமானத்தில் இரண்டு பயணிகள் கரப்பான் பூச்சிகளால் பாதிக்கப்பட்டனர். இது ஒரு அபசமாக நடந்த சம்பவம். உடனடியாக அவர்களை வேறு இருக்கைக்கு மாற்றியோம். கொல்கத்தாவில் விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. வழக்கமாக எங்களது பூச்சிக்கொல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில நேரங்களில் அவை மீறி புகுந்துவிடுகின்றன. இந்த அசௌகரியத்திற்கு ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
பழைய நிகழ்வுகள் மீண்டும் நினைவுக்கு
இது முதல் முறையல்ல ஏர் இந்தியா விமானங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும். சில மாதங்களுக்கு முன்பு, அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் மோதி நொறுங்கியது. அந்த விபத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உட்பட 260 பேர் உயிரிழந்ததை மக்கள் இன்னும் மறந்தல்ல.
சுருக்கமாக
AI180 விமானத்தில் கரப்பான் பூச்சிகள்; 2 பெண்கள் பாதிப்பு
உடனடியாக வேறு இருக்கைக்கு மாற்றம்
கொல்கத்தாவில் முழு சுத்தம்
ஏர் இந்தியா விளக்கம், வருத்தம்
கடந்த கால விபத்துகள் மீண்டும் கவனத்தில்
இந்தச் சம்பவம், விமான பயணங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு ஏர் இந்தியா அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்துகிறது.
English Summary
Women screamed in mid air Air India apologized to screaming passenger What happened