பொங்கல் விடுமுறை...! ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வெள்ளம்...! - Seithipunal
Seithipunal


‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு, விடுமுறை நாட்கள் வந்தாலே சுற்றுலா பயணிகளின் கூடாரமாக மாறுவது வழக்கம். மூடுபனி சூழ்ந்த மலைக்காற்றும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் இயற்கை எழிலுடன் கலந்த இந்த மலைநகரம், ஓய்வை நாடும் பயணிகளின் மனதைக் கவர்ந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியான விடுமுறை கிடைத்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக ஏற்காட்டை நோக்கி திரண்டுள்ளனர்.

இதனால், ஏற்காட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், லேடிஸ் சீட் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ந்தனர்.

கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து சீராக இருப்பதால், அங்கு சென்ற பயணிகள் குளித்து குளிர்ச்சியை அனுபவித்தனர்.மேலும், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமானதன் காரணமாக, ஏற்காடு மலைப்பாதையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.20 கொண்டை ஊசி வளைவுகளிலும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

பாதுகாப்பை உறுதி செய்ய, போலீசார் முக்கிய சந்திப்புகளில் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதனிடையே, தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் ஹோம் ஸ்டேக்கள் அனைத்தும் முன்பதிவுகளால் நிரம்பி வழிந்ததால், ஏற்காடு நகரமே திருவிழா போல் பரபரப்பாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். குறிப்பாக தள்ளுவண்டி கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.பொங்கல் விடுமுறை இன்னும் சில நாட்கள் தொடரவுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal holiday flood of tourists in Yercaud


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->