பொங்கல் பரிசு: வேட்டி, சேலை நெசவுக்கூலி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!
Pongal Gift Scheme Tamil Nadu Government Issues GO Increasing Weaving Wages for Dhotis and Sarees
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகளுக்கான புதிய ரக உற்பத்தி நெசவுக்கூலியை உயர்த்தித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காகக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று நெசவாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதன் அடிப்படையில் கூலி உயர்வைப் பரிந்துரை செய்தது.
புதிய நெசவுக்கூலி விவரங்கள்
அரசின் புதிய உத்தரவின்படி, தறிகளின் வகைகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ள உயர்த்தப்பட்ட கூலி விவரம்:
பெடல் தறி உற்பத்தி: ஒரு சேலைக்கு ரூ. 125.72 மற்றும் ஒரு வேட்டிக்கு ரூ. 49.99 என உயர்த்தப்பட்டுள்ளது.
விசைத்தறி உற்பத்தி: ஒரு சேலைக்கு ரூ. 54.81 மற்றும் ஒரு வேட்டி வரம்பில் வேட்டிக்கு ரூ. 23.34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் அனுமதி
பொங்கல் 2027 திட்டத்திற்காகச் செயல்படுத்தப்படும் இந்தப் புதிய ரக பெடல்தறி மற்றும் விசைத்தறி வேட்டி, சேலை உற்பத்தியால் கூடுதலாகத் தேவைப்படும் ரூ. 13.66 கோடி செலவினத் தொகையானது, 2026-2027 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் சம்மந்தப்பட்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள தொகையிலிருந்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு அனுமதியைக் கைத்தறி இயக்குநருக்கு வழங்கித் தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Pongal Gift Scheme Tamil Nadu Government Issues GO Increasing Weaving Wages for Dhotis and Sarees