பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு..தமிழக முதல்வர் இன்று ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை  குடும்ப அட்டைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இதில் தரமற்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கப்பட்டதாலும்,  21 பொருட்களுக்கு பதிலாக 16 மற்றும் 15 பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாகவே புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொள்கின்றார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இதில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal gift package discussion with cm and minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal