"நைஸா ரூம்குள்ள அழைத்து.. ஐஸா பேசி" தயாரிப்பாளரின் பகீர் செயல்.! 3 வருட அவலம்.!   - Seithipunal
Seithipunal


சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், "எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. 

நான் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதல் வருடம் படித்து வந்தேன். அப்போது, பேஸ்புக்கில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக ஒரு பதிவு இருந்தது. இதனை தொடர்ந்து, அதில் வெளியிட்டிருந்த செல்போன் என்னை தொடர்பு கொண்டு பேசியதில் ஆடிஷன் நடப்பதாக கூறி பொள்ளாச்சி மகாலிங்கபுரத்திற்கு அழைத்தார்கள். 

அவர்கள் குறிப்பிட்ட விடுதிக்கு சென்றபோது கரூர் நள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயது பார்த்திபன் என்பவர் தயாரிப்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் ஒரு அரசியல் பிரமுகர் என்றும் கூறினார். பின்னர் ஒவ்வொரு பெண்களாக அழைத்து ஒரு அறைக்கு வரச் சொல்லி நடிகைகளை தேர்வு செய்தார். 

என்னை அவர் உள்ளே அழைத்த போது எனக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்தவுடன் மயங்கிய என்னை பாலியல் பாலகாரம் செய்தார். மயக்கம் தெரிந்து நான் கேட்டபோது உனக்கு இப்போது 17 வயது ஆகிறது. 18 வயதானவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும், படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன் என்றும் என்னிடம் ஆசையாக பேசினார். 

இப்படி அடிக்கடி திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை பாலியல் வன்புணர்வு செய்து வந்தார். அப்பொழுது, கர்ப்பமான நிலையில் நீ கர்ப்பமானால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்று கூறி எனது கர்ப்பத்தை கலைத்தார். அதன் பின் என்னிடம் பேசுவது, பழகுவதை அவர் நிறுத்திவிட்டார். 

கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பார்த்திபன் என்னை ஏமாற்றி விட்டார்." என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் பாலியல் வன்புணர்வு செய்த போது 17 வயது ஆகியிருந்த காரணத்தால் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pollachi producer raped a girl for 3 years


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->