3-ம்‌ கட்ட வாக்குப்பதிவு இன்று.. காந்தி பிறந்த மண்ணில் ஓட்டு போடும் மோடி, அமித்ஷா.!! - Seithipunal
Seithipunal


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவை பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்கனவே இரண்டு கட்டு வாக்கு பதிவுகள் நடைபெற்ற முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழகம் புதுச்சேரி உட்பட 21 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. 

அதேபோன்று கேரளா ஜம்மு காஷ்மீர் ஃபுல் லிட்டர் 12 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மக்களவைப் பொதுத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 

அசாமில் 4, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 7, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்திய பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தரபிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பலம் கொண்ட பல்வேறு மாநிலங்களில் 93 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 

இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் பல முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சிவராஜ் சிங் சவுகான், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திக் விஜய் சிங், சுப்ரியா சுலே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தங்கள் வாக்குகளை இன்று செலுத்த உள்ளனர். இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd phase polling Today Modi Amit Shah going to vote


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->