பொள்ளாச்சி விவகாரம்! பெண்களை மிரட்டி பறித்த பணத்தை வைத்து அந்த கொடூர மிருகங்கள் என்ன செய்துள்ளனர் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் ௭ ஆண்டுகளாக சமூகவலைத்தளங்கள் மூலம்  200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த    விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தை  அவர்கள் என்ன செய்தார்கள் என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இந்த கொடூர செயலுக்கு முக்கிய காரணமாக இருந்த திருநாவுக்கரசின் தந்தை வட்டி தொழில் செய்து வந்த  நிலையில் பெண்களை மிரட்டி பறித்த அந்த பணத்தை வைத்து திருநாவுக்கரசு பெருமளவில் வட்டித்தொழில் செய்வது தெரியவந்துள்ளது. 

மேலும் மற்றொரு குற்றவாளியான சதீஷ்,அந்த  பணத்தை வைத்து ரெடிமேட் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சதீஷ் கைதான பிறகு அந்த கடை தற்போது  பூட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pollachi issue money get from affected girl by blackmailing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal